ஏன் பணம் தேவை?எதற்கு பணம் தேவை?யாருக்கு பணம் தேவை?எப்போது பணம் தேவை?பணத்தேவைக்கு எவை9முக்கிய காரணங்கள்?
**மனிதனுக்கு செல்வம்,பணம் தேவைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.முதன்மையான காரணம் அடிப்படைத் தேவைகளான உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்துகொள்வது.**மேலும்,கல்வி,மருத்துவம் போன்ற மனிதனின் திடமான வாழ்க்கைக்கு பணம் இன்றியமையாதது.பணம் ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்தவும்,தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.
பணம் தேவைப்படுவதற்கான9முக்கிய காரணங்கள்:
- அடிப்படைத் தேவைகள் உணவு,உடை,இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் தேவை.
- கல்வி தரமான கல்வி பெறுவதற்கு பணம் தேவை.ஒருவரின் அறிவு மற்றும் திறமையை மேம்படுத்த,கல்வியில் முதலீடு செய்வது அவசியமாகிறது.
- மருத்துவம் திடமாக உடல்நலத்தைப் பேணுவதற்கும்,நோய்களை குணப்படுத்துவதற்கும் மருத்துவச் செலவுகள் தேவை.அதற்கு பணம் அவசியம்.
- சமூக அந்தஸ்து ஒருவரது சமூக அந்தஸ்தை உயர்த்த,பணம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது.பணம் கொண்டு வாங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருவரது சமூக நிலையை வெளிப்படுத்துகின்றன.
- தன்னம்பிக்கை பணம் ஒருவரது தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது.ஒருவரது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்போது,அவர் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும்.
- நிதி சுதந்திரம் பணம் ஒருவருக்கு சுதந்திரத்தை நிதி அளிக்கிறது.பணம் இருந்தால்,எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்,எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.
- முதலீடு வருங்காலத்திற்காக சேமிக்கவும்,முதலீடு செய்யவும் பணம் தேவை.இது ஒருவரது நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கிறது.
- குடும்பத் தேவைகள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்,எதிர்காலத்திற்காக சேமிக்கவும் பணம் தேவை.
- சமூக சேவை சமூகத்தில் உள்ள ஏழை எளியோருக்கு உதவுவதற்கும்,தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கும் பணம் தேவை.
பணத்தால் என்ன பிரயோஜனம்?எந்த வழியில் பணத்தை தேடுவது?மனிதனின் பணத்தேவை எப்போது முடியும்?பணம் மட்டுமே வாழ்க்கை என்று பலரும் கூறுவது ஏன்?தொழில்/பணம்/சொத்து/செல்வம்/வருமானம் ஏன்?எப்படி?எதனால்?மக்களிடம் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்.பணத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன?பணத்தால் இடைவெளி எவ்வாறு நிரப்பப்படுகிறது?
என்னங்க இப்படி கேட்டுவிட்டீர்களே?அந்த காலத்திலேயே திருவள்ளுவர் கூறிவிட்டார். "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை! "அப்புறம் என்ன?நாம் இந்த உலகில் கௌரவமாக வாழ வேண்டும் என்றால் பணம் தான் உங்களை முன்னிறுத்தும்.பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்குமாம்!அப்புறம் நாம் மட்டும் என்னவாம்?
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’'இது ஒளவையாா் வாக்கு.திரவியம் என்பது செல்வத்தைக் குறிக்கும்.கடல் கடந்து சென்றாவது செல்வத்தைத் தேடு என்பதே இதன் பொருள்.
கோடி!இல்லை,இல்லை..ஒரு நூறு கோடி இல்லை!ஆயிரம் கோடி இருந்தாலும் இன்னும் கோடிகளை தேடி அலைபவர்களைப் பாருங்கள்.அவர்கள் ஏழு தலைமுறைகளுக்கு சம்பாதிக்க அலைகிறார்கள்.
நாம் அன்றாட பிழைப்புக்கு அல்லது நமது உடன் தலைமுறைக்காவது சேர்க்க வேண்டாமா??
இந்த மனிதன் இருக்கிறான் பாருங்கள்,என்ன அறிவு!குழந்தையில் இருந்து17அலலது18வரை தனது தாய் தந்தை உழைப்பில் உண்கிறார்கள்.அப்புறம் அவனுக்கு ஒரு வாழ்க்கை தன் குடும்பம் பிள்ளை என ஓடி ஓடி அவர்களுக்கும் சம்பாதிக்கிறார்கள்.ஒருசிலர் நியாயமான முறையில் பணத்தை தேடி தனக்கான வாழக்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.வேறு சிலர் தர்மம்,நியாயம் என்ற அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று அலைகிறார்கள்.
ஈட்டி எட்டும் வரை பாயும் பணம் பாதாளம் வரை பாயும் என்பர்.அந்த பாதாளம் எது என்பது யாருக்கும் தெரியாது!
கூட்டை விட்டு பறக்காத பறவை இறந்து விடும்.
வில்லை விட்டு புறப்பட்டாத அம்பு ஒன்றும் செய்யாது.
தேங்கிக் கிடக்கும் தண்ணீர் நாற்றம் எடுத்து விடும்.
எந்த ஒரு விலங்கு அல்லது பறவை இனமாயினும் தனது குட்டி/குஞ்சுகளுக்கு வளரும் வரை தான் இறை தேடி வந்து ஊட்டும்.பின்னர் அவைகள் தனக்கான இரையை தாங்களே தேடிக் கொள்ளும்,அப்படி போகவில்லை என்றால் அவைகள் இறக்க நேரிடும்!
எந்த ஒரு நபருக்கும் தனது வாழ்க்கையை பற்றிய தெளிவான சிந்தனை/அறிவு வேண்டும்.தன் **இலக்கு என்ன?**அதற்கான முயற்சி இவைகளைப் பற்றிய ஒரு புரிதல் வேண்டும்.எதுவும் இன்றி நானும் சம்பாதிக்கிறேன் பேர்வழி என்பது போல் காற்று வீசும் காலத்தில் மாவு விற்கவும்!மழை பெய்யும் காலத்தில் உப்பு விற்க போவதைப் போல்..!
பொறியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் எத்தனை பேர் தான் படித்த படிப்புக்கு சம்பந்தமே இல்லாமல் வேறு தொழில் செய்கிறார்கள்?இதற்காகவா இந்த பொறியியல் படிப்பு? Zomoto swiggyடெலிவரி செய்ய10, 12ம் வகுப்பு போதுமே?அப்புறம் இந்த நான்கு ஆண்டு பொறியியல் படிப்பை ஏன் படிக்க வேண்டும்?
அதே போல் கலை அறிவியல் பட்டதாரிகள், +2முடிந்ததும் ஏதோ ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொள்கின்றனர்.இந்த பட்டப் படிப்பின் நோக்கம் என்ன?உங்கள் இலட்சியம் என்ன?நாம் எதைநோக்கிப் போக வேண்டும்?என்ற புரிதல் வேண்டும்.வெறும் பட்டம் ஒன்றே இலக்கு ஆகாது!நல்ல மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்!பட்டம் பெற்றதும்,வேலைதான் உங்கள் இலக்கு என்றால் அதற்கான இலக்கை படிக்கும் காலத்திலேயே தொடங்குங்கள்.
மாறாக சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்றால்,உங்களுக்கு என்னென்ன வழிகளில்,உங்கள் படிப்பின் அடிப்படையில்!உங்கள் திறமைக்கு ஏற்றவாறு!எந்த தொழில்களில் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறதோ,அதைத் தேடிப் போய் கற்றுக் கொள்ள வேண்டும்.சரியான திட்டமிட்ட முயற்சிக்கு நிஜமாகப் பலரும் அறிவுப்பூர்வமாகவோ,அனுபவமாகவோ,முதலீடு மூலமாகவோ உதவுவார்கள்.
வேறாக நீங்கள் விவசாய தொழில் ஈடுபட வேண்டும் என்றால்!அதற்கான வழிமுறைகள் கோழிப்பண்ணை,கறவைமாடு வளர்ப்பு,ஆடுவளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்ள தேவையான உதவிகளை உங்கள் பகுதியில் உள்ள விவசாய அனுபவசாலிகளை தேர்ந்தெடுத்து,சந்தித்து உதவி கோரினால் தகுந்த உதவி கிடைக்கும்.உங்கள் மண் சார்ந்த நுட்பமான அறிவாற்றலை வளர்த்து கொள்ளுங்கள்.
இப்படி எத்தனையோ விதமான தொழில் துவங்கி நேர்மையான முறையில் பணம் ஈட்டிட முடியும்.
முயன்றால் முடியாதது என்று ஒன்றும் இல்லை
If you think you can the how to do steps will develope.
உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தால்,எப்படி செய்வது என்பதற்கான படிகள் உருவாகும்.
பணத்தின் அருமை உணர்ந்து அளவோடு சேமித்து உற்றார் உறவினருடன் மகிழ்வாக வாழுங்கள்.அளவுக்கு அதிகமான பணத்தேடலும் ஆபத்தே!பல வழிகளில் கெட்ட பெயரை பெற்று தருவதோடு,குழந்தைகளும் பணத்தின் அருமை தெரியாமல் தான்தோன்றித் தனமாக பணத்தினையும் மதிப்பின்றி செலவு செய்து,
குந்தித் தின்றால் குன்றும் குறையும் என்ற பழமொழிக்கு உதாரணமாகி விடுவார்கள்.
ஆக நடைமுறைக்கு சாத்தியமான நல்ல வழியில் பண தேவையை தேடிட பழக்கப்படுத்தி விடுங்கள்.பணம்9காரணங்களை மட்டுமல்ல10வதாக மறைமுகமாக உங்கள் குழந்தைகளுக்கு உழைப்பின் நோக்கத்தையும் கற்றுக்கொடுத்து,பணம் பத்தும் செய்யும்.