"வைட்டமின் B” என்பது 8 ஊட்டசத்துக்கள் ஒன்றிணைந்த ஊட்டச்சத்து குழுமம் ஆகும்

by Vijay Mayilsamy

Video Thumbnail

வைட்டமின் B” என்பது 8 ஊட்டசத்துக்கள் ஒன்றிணைந்த ஊட்டச்சத்து குழுமம் ஆகும்

வைட்டமின் B” என்பது 8 ஊட்டசத்துக்கள் ஒன்றிணைந்த ஊட்டச்சத்து குழுமம் ஆகும். இந்த ஊட்டச்சத்துக்களில் எந்த ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என்பதை பொறுத்தே வைட்டமின்Bகுறைபாட்டை அளவிட முடியும்.வைட்டமின் B நிறைந்த உணவுகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அளவிலும் வேறு வேறு வைட்டமின்Bஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த உணவுகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான டயட்டை பின்பற்றினால் வைட்டமின்Bகுறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

நமது உடலில் செல்கள் கட்டுமானம்,ரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி,மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடு,நரம்பு மண்டல செயல்பாடுகள்,கண்பார்வை,செரிமானம்,பசி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு வைட்டமின் Bயின் 8 ஊட்டச்சத்துக்களும் உதவுகின்றன. எனவே,போதுமான வைட்டமின் B நமது உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் நமது உடல் ஆரோக்கியம் மோசமான முறையில் பாதிக்கப்படும்.

ஊட்டச்சத்து வாரியாக என்ன குறைபாடுகள் ஏற்படும்?அறிகுறிகள் என்ன?என்பதை பார்த்து விடுவோம்.

வைட்டமின் B குறைபாடு

வைட்டமின்Bஊட்டச்சத்துக்கள் நீரில் கரையும் தன்மை கொண்ட ஊட்டச்சத்துக்கள்.இவை பல்வேறு உணவுகளில் காணப்பட்டாலும்,அவை சமைக்கும் முறையில் பெரியளவு கரைந்து விடுகின்றன.இந்த காரணம் மற்றும் மோசமான உணவுமுறையால் உடலுக்கு தேவையான வைட்டமின்Bகிடைப்பதில்லை.

இது நமது உடலில் வைட்டமின்Bகுறைபாட்டை ஏற்படுத்தி உடல் சோர்வில் துவங்கி ரத்தசோகை,பதற்றம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பது வரை நடக்கிறது. இதில் ஒவ்வொருBவைட்டமின் ஊட்டச்சத்தின் பாதிப்பும் வேறு வேறாக இருக்கும்.இதிலும் குறிப்பாக வயதானவர்கள்,கர்ப்பிணி பெண்கள்,அதீத குடிப்பழக்கம், நாள்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு வைட்டமின்B குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வைட்டமின்B1 மற்றும் B2

தையாமின் மற்றும் ரிபோஃபிளவின் என்றழைக்கப்படும் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் உணவை எனெர்ஜியாக மாற்றவும்,கண்பார்வை ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இவை அதிகமான உணவுகளில் காணப்படுவதால் இவற்றின் குறைபாடு ஏற்படுவது அரிது எனினும்,குறைபாடு ஏற்பட்டால் வாய் அருகில் வெடிப்பு மற்றும் மனக் குழப்பம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.

வைட்டமின் B3

நியாசின் என்று அழைக்கப்படும் இது செரிமானம் மற்றும் ஆரோக்கியமான பசி ஏற்படவும் உதவுகிறது.மேலும்,உணவை எனெர்ஜியாக மாற்றவும்,செல்கள் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.இதன் குறைபாடு ஏற்பட்டால் அஜீரண கோளாறுகள்,அடிவயிற்று வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.மேலும்,ப்ரைட்டான நாக்கு,நிறம் மாறும் சருமம்,வாந்தி,பேதி,மலச்சிக்கல்,பிரம்மை போன்ற அறிகுறிகள் கூட ஏற்படும்.

வைட்டமின் B6

பைரிடாக்சின் என்றழைக்கப்படும் இந்த வைட்டமின்B6தான் நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலுக்கு தேவையான எனெர்ஜியாக மாற்றி கொள்ள உதவுகிறது.மேலும்,நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது.

எனவே,வைட்டமின் B6 குறைவாக இருந்தால்,ரத்த சோகை,சரும பாதிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.அரிக்கும் சருமம் மற்றும் வாயை சுற்றி வெடிப்புகளும் ஏற்படும்.அது இல்லாமல்,டிப்ரஷன்,டெர்மடிடிஸ்,பதட்டம்,குமட்டல்,தொற்று நோய் பாதிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படும்.

வைட்டமின் B9

போலேட் என்றழைக்கப்படும் வைட்டமின்B9 ரத்த சிவப்பு செல்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறைவதால் ரத்த சோகை, உடல் சோர்வு, கவனச்சிதறல், சரும நிறம் மாறுதல், வாய் புண்கள், சுவாச பிரச்சனைகள், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம்.

வைட்டமின்B12

வைட்டமின்B குடும்பத்திலேயே அதிகமாக பயனுள்ள முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின்B12 தான். நரம்பு மண்டல செயல்பாடுகள், மூளை செயல்பாடுகள் என பலவற்றிற்கு உதவுகிறது. எனவே,வைட்டமின்B12 குறைபாடு ஏற்படுவதால் நரம்பு மண்டல செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

முறையற்ற வடிவமுள்ள ரத்த சிவப்பணுக்கள் உருவாகி அவை ஒழுங்காக வேலை செய்யாத நிலை உருவாகும்.அதே போல் மறதி நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. வைட்டமின் B12 குறைபாடு இருந்தால் உடல் சோர்வு,பலவீனம்,மலச்சிக்கல்,பசியின்மை,எடை குறைவு,கால் கைகள் மரத்து போதல்,பதட்டம்,குழப்பம்,மறதி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

வைட்டமின் B அதிகமுள்ள உணவுகள்

ஒவ்வொரு வைட்டமின் B ஊட்டச்சத்தும் ஒவ்வொரு உணவில் உள்ளது.எனவே,முறையான டயட்டை துவங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். இந்த உணவுகளை உண்பதன் மூலமே உங்களுக்கு தேவையான வைட்டமின் B கிடைத்து விடும். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவர் பரிந்துரையோடு சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளலாம்.

  • மீன்வகைகள்,கோழி உள்ளிட்ட இறைச்சிகள்
  • முட்டை
  • சீஸ்
  • உருளைக்கிழங்கு உள்ளிட்ட ஸ்டார்ச் காய்கறிகள்
  • பழங்கள்
  • பீன்ஸ்
  • முழு தானியங்கள்
  • கொழுப்பு குறைந்த பால்
  • ப்ரோக்கோலி,கீரைகள் உள்ளிட்ட பச்சை காய்கறிகள்