MANUAL THERAPY
பண்டைய காலத்தில்,மேனுவல் தெரபி(manual therapy)என்பது மனிதன் மற்றும் விலங்குகளின் உடல்நலத்தை கவனிக்கும் ஒரு பாரம்பரிய முறையாக இருந்தது.குறிப்பாக மருத்துவத்தில் பிசியோதெரபி,மசாஜ் மற்றும் எலும்பு சம்மந்தமான சிகிச்சைகள் இதற்குள் அடங்கும்.
பண்டைய காலத்தில் மேனுவல் தெரபி:
- பண்டைய எகிப்தியர்கள்: அவர்கள் உடலின் இயக்கத்தை மேம்படுத்தவும்,காயங்களை குணப்படுத்தவும் மசாஜ் செய்தார்கள்.
- பண்டைய கிரேக்கம்: ஹிப்போகிரட்டீஸ் மற்றும் கேலன் போன்றவர்கள் உடல் நலம் மற்றும் காயங்களை குணப்படுத்த பிசியோதெரபி,மசாஜ் மற்றும் ஹைட்ரோதெரபி போன்ற பல வழிகளைப் பயன்படுத்தினர்.
- பண்டைய ரோமர்கள்:
ரோமர்கள் தண்ணீர் சிகிச்சை,கயாச்சி (jacuzzi)போன்ற ஹைட்ரோதெரபி முறைகளைபயன்படுத்தினர்.
- பண்டைய இந்தியா:
சித்த மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் உடலில் உள்ள தசை மற்றும் நரம்புகளைசரிசெய்யவும்,எலும்பு முறிவு குணப்படுத்தவும் மேனுவல் தெரபி முறைகளை பயன்படுத்தினர்.
மேனுவல் தெரபி வரலாறு:
- 19-ம் நூற்றாண்டு: வட ஐரோப்பாவில்,எலும்பு முறிவு சரி செய்யும் முறை (bone setters)போன்ற மேனுவல் தெரபி முறைகள் பிரபலமடைந்தன.
- பிசியோதெரபி: 19-ம் நூற்றாண்டில்,உடல் சிகிச்சைக்கான தொழில்முறை பயிற்சி தொடங்கியது.இது மேனுவல் தெரபியை உள்ளடக்கியது.
பிசியோதெரபி என்பது சக்தி மற்றும் இயக்கங்கள்(உயிர்-இயக்கவியல் அல்லது நுண்ணுயிரியல்),கையேடு சிகிச்சை,உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் பிசிகல்தெரபிசாதனங்கள்ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குறைபாடுகளை சரிசெய்து,நோயாளிகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் இது இணைந்த ஆரோக்கியமான மருத்துவ முறை ஆகும்.நோயாளிகளின் உடல் பரிசோதனை,நோய் கண்டறிதல்,முன்கணிப்பு மற்றும் உடல் பயிற்சி சிகிச்சை மூலம் நோயாளியின் உயிர் தரத்தை மேம்படுத்துவதற்கு இயன்முறை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.
நரம்பு சார்ந்த நோய்கள் ஏற்படும்போது,நோய் பாதிப்பின் நிலையைப் பொறுத்து உடற்பயிற்சிகள் மூலமாகவும்,சாதனங்கள் உதவியுடனும் தொடர் சிகிச்சையளிக்கப்படும்.வலுவிழந்த தசைகளையும் நரம்புகளையும் மீண்டும் வலுவடையவைப்பது,அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது ஆகியவைதான் பிசியோதெரபியின் முக்கிய வேலை.நரம்பு சார்ந்த பாதிப்புகள் முதியோருக்கு வராமலிருக்க சுடோகு,செஸ்,குறுக்கெழுத்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவதுடன்,மூளையை எப்போதும் ஏதாவதொரு செயலில் ஈடுபடுத்த வேண்டும்.இந்த முறைக்குப் பெயர்`பிரெய்ன் ஜிம்’(Brain Gym).மூளையின் நினைவுத்திறனை அதிகப்படுத்த நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டு,பதிலளிக்க வேண்டும்.இப்படி தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் ஞாபகமறதியிலிருந்து விடுபடலாம்.
ஆஸ்துமா,எம்பைசீமா(Emphysema)போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மூச்சுவிட சிரமப்படுவார்கள்.அவர்களுக்கு இருமல் அதிகமாக இருக்கும்.இந்த நிலையில் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி,உடற்பயிற்சிகளைப் பயிற்றுவித்து,அவர்களது பலவீனமான தோள்பட்டை மற்றும் தசைகளை வலுப்படுத்தி,அறுவை சிகிச்சை செய்யாமலேயே மூச்சுவிடும் திறனை மேம்படுத்துவார்கள்.
மாறிவிட்ட வாழ்க்கைமுறை,சிறு வயதில் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் இருப்பது போன்றவற்றால் குழந்தைகளுக்கு அதிகளவில்`ஜுவைனைல் டயாபடிஸ்’(Juvenile Diabetes), `ஜுவைனைல் ஒபிசிட்டி’(Juvenile Obesity)போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.இந்த பாதிப்புகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால்,குழந்தைகள்`ஜங்க் ஃபுட்ஸ்’(Junk Foods)அதிகம் உண்பதைத் தவிர்த்துவிட்டு,சத்தான காய்கறிகளை உண்ண வேண்டும்.அதேபோல் செல்போன்களில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதில்,ஓடியாடி விளையாட வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்குத் தசை மற்றும் தசைநார்க் காயங்கள் ஏற்பட அதிகளவு வாய்ப்பிருக்கிறது.அண்மைக்காலமாக,கிரிக்கெட்,ஹாக்கி,கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் பிரச்னைகளைக் களைய, `ஆன் ஃபீல்டு’, `ஆஃப் ஃபீல்டு’ என இரண்டுவிதமான பிசியோதெரபிகள் இருக்கின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் காயம் ஏற்படும்போது உடனடியாக முதலுதவியளித்து,அவர்களைத் தயார்படுத்தி,விளையாட வைப்பது`ஆன் ஃபீல்டு ட்ரீட்மென்ட்.’மைதானத்தில் காயம்பட்ட வீரருக்குச் சிகிச்சையளித்து,அந்தக் காயத்தை முழுமையாக ஆறச்செய்து,இழந்த தசை மற்றும் தசைநார்களின் வலிமையை மீண்டும் பெறவைப்பது`ஆஃப் ஃபீல்டு ட்ரீட்மென்ட்.’
விளையாட்டு வீரர்கள் தகுந்த பிசியோதெரபிஸ்ட்டின் துணையுடன்`வார்ம் அப்’(Warm Up)மற்றும்`கூல் டவுண்’(Cool Down)பயிற்சிகளைச் செய்வார்கள்.ஆனால்,பொழுதுபோக்குக்காக விளையாடுபவர்கள் அப்படிச் செய்வதில்லை.அதனால் திடீரென்று கடினமான விளையாட்டுகளை விளையாடும்போது,கால் தசைநார்கள் பாதிக்கப்படலாம்.அவை குணமாக நீண்ட நாள்கள் ஆகும்.
வயதானோருக்கு இதயம்,சுவாசம்,தசை,மூட்டு மற்றும் நரம்பு சார்ந்த பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.அந்தப் பிரச்னைகள் மற்றும் நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும்,அவற்றிலிருந்து விடுபடவும் இந்தச் சிகிச்சை தரப்படும்.
வயது மூப்பு காரணமாக ஞாபகமறதி,கவனச் சிதைவு,கண் பாதிப்புகள்,பார்வைத்திறன் குறைவதால் நடக்கும் திறன் பாதிப்பு,மூட்டுத் தேய்மானம்,முதுகுத்தண்டுவட பாதிப்பு,ஆண்களுக்கு புரோஸ்டேட்(Prostate)புற்றுநோய்,பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் போன்றவை ஏற்படும்.இந்த நோய்களின் தாக்கத்தைக் குறைக்க,வயதானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும்.
நம் உடலின் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட தசைத் தொகுதி காரணமாக இருக்கிறது.அந்தத் தசைகளை எப்படி வலிமையடையச் செய்வது,மேம்படுத்துவது என்பது குறித்த பிசியோதெரபி இது.ஒரு செயலை எப்படிச் செய்தால் எளிமையாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் என்று இந்த முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.தசை அசையும் திறனை மேம்படுத்துவது,உடல் அமைப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவது ஆகியவைதான் இந்தச் சிகிச்சையின் நோக்கம்.இதன் மூலம் வலி இல்லாமல் ஒரு செயலை எளிதாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும்.இந்தத் துறையில் வளர்ந்துவரும் ஒரு பிரிவுதான்`பணிச் சூழலியல்’(Ergonomics).பணியிடங்களில் ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் ஒரு வழிமுறை.மூப்படைவதற்கு முன்னரே பணிச்சூழல் காரணமாக முதுகுவலி,மூட்டுவலி,கழுத்துவலி போன்றவை பலருக்கும் ஏற்படுகின்றன.நம்மை வருத்திக்கொள்ளாமல் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொடுக்கிறது இந்த சிகிச்சை முறை.
மேனுவல் தெரபியின் பயன்கள்:
- காயங்களை குணப்படுத்தவும்,தசைகள் மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
- உடலின் இயக்கத்தை மீட்டெடுக்கவும்,வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
- காயங்களை தடுக்கும் வகையில் உடலை தயார் செய்ய உதவுகிறது.
தற்கால மேனுவல் தெரபி:
- இன்று,மேனுவல் தெரபி பிசியோதெரபி மற்றும் உடலியக்க மருத்துவம் (physical therapy)போன்ற துறைகளில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
- உடல் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தவும்,காயங்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
சில பிரச்னைகளுக்கு சில நாள்கள் மட்டும் கிளினிக் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.பிறகு,வீட்டில் பயிற்சிகளைச் செய்தாலே போதும்.சில பிரச்னைகளுக்கு நீண்டகாலம் சிகிச்சை எடுக்கவேண்டியிருக்கும்.அது முடிந்ததும்,பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனைப்படி சிகிச்சையை நிறுத்திக்கொள்ளலாம்.
புனர்வாழ்வு என்பது நோயுற்ற பிறகு பயிற்சி மற்றும் சிகிச்சையின் மூலம் உடல்,மனது மற்றும் சமூக அடிப்படையில் ஆரோக்கியமான அல்லது சாதாரண வாழ்க்கைக்கு ஒருவரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை.இதில் இயன்முறை மருத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.

