மனித வரலாற்றில் கிளிஞ்சல்-சங்கு-சோழியின் பங்கு

by Vijay Mayilsamy

Video Thumbnail

மனித வரலாற்றில் கிளிஞ்சல்/சங்கு/சோழி என்ன பங்கு?என்ன பயன்?

பழங்காலசங்கப் பாடல்களில்,சங்கு அல்லது சோழி போன்ற கடல் சார்ந்த பொருட்கள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.இவை பெரும்பாலும் அழகு,தொழில்,மற்றும் இயற்கையின் கூறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக,சங்க இலக்கியங்களில் சங்கு,வளை என்று அழைக்கப்பட்டது.அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்குவது இதன் இயற்கையான அமைப்பு.

கிளிஞ்சல் என்றால் என்ன?

உயிரியல் நோக்கில் கிளிஞ்சல்கள்,சிப்பி,நத்தை போன்ற கடல்வாழ் மெல்லுடலிகளின் வெளிப்புற பாதுகாப்புக் கூடு ஆகும்.இவை கடல் உயிரினங்களின் வீடாகவும்,பாதுகாப்புக் கூடாகவும் செயல்படுகின்றன.

வேதியியல் நோக்கில் கிளிஞ்சல்கள்,கால்சியம் கார்பனேட் என்ற வேதிப்பொருளால் ஆனவை,இது அவற்றை கடினமானதாகவும்,நீடித்ததாகவும் ஆக்குகிறது.

சுற்றுச்சூழல் நோக்கில் கிளிஞ்சல்கள்,கடலோரப் பகுதிகளில் நில அரிப்பைத் தடுக்க உதவுகின்றன.கிளிஞ்சல்கள் அதிக அளவில் இருப்பதால்,காற்று,அலைகள் மற்றும் நீரோட்டங்கள் கரையோர வண்டலை நகர்த்துவது கடினமாகிறது,அதனால் நில அரிப்பு தடுக்கப்படுகிறது.

மனித பயன்பாடு நோக்கில் கிளிஞ்சல்கள் பல்வேறு கலைப்பொருட்கள்,அலங்காரப்**** பொருட்கள்,கைவினைப்**** பொருட்கள்**** மற்றும் ஆபரணங்கள் செய்யப் பயன்படுகின்றன.மனித வரலாற்றில்சில இடங்களில் கிளிஞ்சல்கள் நாணயங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கிளிஞ்சல் எத்தனை வகைப்படும்?

கிளிஞ்சல்களில் அடிப்படையாக இரண்டு வகைகள் உண்டு.முதலாவது சிப்பி வகை(bivalves).முத்துச் சிப்பி என்றும் அழைக்கப்படும் இதில் மேலும் கீழுமாக இரண்டு ஓடுகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.இடையில் சிப்பிப் பூச்சி வாழும்.பெரும்பாலும் மண்ணுக்குள்ளோ அல்லது பாறைப் பிளவுகள்,கடினமான பரப்புகளிலோ இது ஒட்டிக் கொண்டிருக்கும்.கடற்கரைகளில் வாழும் சிப்பிகளில் பெரும்பாலானவை,மண்ணுக்குள் புதைந்தே கிடக்கும்.

ஒரு துளை வழியாக நீரை உறிஞ்சி,மற்றொரு பக்கம் உள்ள துளை வழியாக நீரை வடிகட்டி அனுப்புவதன் மூலம் தண்ணீரில் உள்ள நுண்ணுயிர்களைச் சாப்பிட்டுச் சிப்பிப் பூச்சி வாழ்கிறது.சில நேரங்களில் ஓர் உயிரினம் கடல் நீரில் மிதக்கவும்கூடக் கிளிஞ்சல்கள் உதவுகின்றன.மற்றொன்று சங்கு வகை(gastropod).இவற்றுக்கு இரண்டு ஓடுகள் கிடையாது,இவை ஒரே ஓட்டால் ஆனவை.அந்த ஓடு பெரும்பாலும் சுருள்சுருளாக இருக்கும்.இந்த ஓடுகளின் வடிவம்,அளவு,வண்ணம்,நுணுக்கமான வடிவமைப்பு போன்றவை இயற்கை எனும் பெருஞ்சிற்பி வடித்த சிற்பங்களைப் போலிருக்கும்.சங்குகளிலும் சிறியதாக,கூம்பு வடிவம் அல்லாத மற்ற வடிவங்களில் அமைந்தவை சோவி/சோழி எனப்படுகின்றன.

சங்கின் பயன்பாடு:

கடலின் அடையாளமாக சங்கு கருதப்படுகிறது. "மாநிலஞ் சேவடிஆகத்,தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை ஆக"என்ற நற்றிணை பாடல் வரிகளில்,சங்குகள் ஒலிக்கின்ற கடல் ஆடையாக அணிந்த மாயோன் என்று வளை (சங்கு)குறிப்பிடப்படுகிறது.சங்குகள் அழகிய பொருட்களாகவும்,அணிகலன்களாகவும் பயன்படுத்தப்பட்டன.சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் பெண்கள் விரும்பி அணிந்தனர்.சங்கினை ஊதி,போர் தொடங்குவது அல்லது எச்சரிக்கை விடுப்பது போன்ற செயல்களுக்கு பயன்படுத்தினர்.பழங்காலத்தில் இந்தச் சங்குகளில் இருந்து வளையல்கள் உருவாக்கப்பட்டன.சங்குகள் வளைந்து வளைந்து இருப்பதால்,அவற்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட அணிகலன் வளையல் எனப்பட்டது.

சோழியின் பயன்பாடு:

சோழியில்,சுண்ணாம்பு சத்தான கால்சியம் அதிகமாக உள்ளது.இந்த கால்சியம் சத்துக்களுடன் தொடர்பு உள்ளபோது**** பெண்கள் மீது கெட்ட ஆவி தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கப்படுமாம்!அதனால்தான் பல்லாங்குழியில் சோழி பயன்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்ல,சோழிகளை வைத்து விளையாடப்படும்,மனம் ஒருமுகப்பட்டு,ஒன்றையே கூர்ந்து கவனிக்கும்.நினைவுத்திறன்,செவி,கண்களுக்கு மட்டுமல்லாமல்,கை விரல்களுக்கும் சிறந்த பயிற்சியை பல்லாங்குழி விளையாட்டு தருகின்றன.எந்த காரியம் நிறைவேற வேண்டுமானாலும் சோழிகளை குலுக்கி உருட்டி போட்டு எடுப்பார்கள்.ஆன்மிக நோக்கில் சோழியின் பயன் நம்பிக்கைக்கு ஏற்ப அனுபவிக்கத்தக்கது,ஒரு அளவிட்டு கூற இயலாது.

சோழியை வீட்டில் எப்படி வைத்துக் கொள்ளலாம்?

சோழிகள் பெரும்பாலும் பிரசன்னம் பார்ப்பதற்காகத் தான் பயன்படுத்தப் படுகின்றது.சோழியை சுழற்றி போட்டு,நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ன நடக்காது என்பதை,சோழி பிரசன்னத்தால் சிலர் மிகச்சரியாக கூறிவிடுவார்கள்.இது அந்த காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்தது,நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.சோழியில் மொத்தமாக130வகை சோழிகள் இருப்பதாக நூல்களில் கூறப்பட்டுள்ளது.எல்லா வகை சோழியையும் நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.தவறு ஒன்றும் இல்லை.எந்த வகை சோழி நம் வீட்டில் இருந்தாலும் அது நம் வீட்டிற்கு நல்ல பலனைத் தரும்.எப்படிப்பட்ட வாஸ்து தோஷமாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியானது இந்த சோழிக்கு உள்ளது.

பொதுவாகவே கடலிலிருந்து எடுக்கப்படும் எந்த பொருட்களாக இருந்தாலும் அதை மகாலட்சுமிக்கு இணையாக கூறுவார்கள்.அப்படிப்பட்ட ஒரு பொருள் தான் இந்த சோழி.இந்த சோழியை நம் வீட்டில் எப்படி வைத்தால்,மகாலட்சுமியின் ஆசையை முழுமையாக பெற முடியும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள தான் இந்தblogபதிவு.

உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு ஐந்து சோழியை வைத்து வழிபடவேண்டும்.ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.இதற்கு என்று தனியாக வழிபாடு ஏதுமில்லை.விளக்கு ஏற்றி பூஜை செய்யும் போது சோழிக்கும் ஊதுவத்தி,சூடம் காட்டுவது நல்லது.சில பேர் பூஜை அறையில் வைத்தது போக,சில சோழிகளை தங்களது வீட்டில் வைத்திருப்பார்கள்.இந்த சோழிகளை என்ன செய்யலாம்?

பொதுவாகவே நம் வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வெற்றிலை பாக்கு வைத்து மகாலட்சுமிக்கு தீபமேற்றி பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்போம்.அந்த வெற்றிலை பாக்குடன்,ஒன்று அல்லது இரண்டு சோழியையும் வைத்து எவருக்கேனும் தானமாகக் கொடுத்தால்,தானம் கொடுப்பவருக்கும் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.தானமாக பெறுபவரும் செல்வ செழிப்போடு இருப்பார்கள்.

சோழியால் யாருக்கு அதிர்ஷ்டம்?

சோழியை தானமாக கொடுப்பவரது அதிர்ஷ்டம்,சோழியை தானமாக பெறுபவர்களுக்கு சென்று விடுமோ?என்று அச்சப்பட வேண்டாம்.சோழியை தானமாக கொடுப்பவரும் அதிர்ஷ்டசாலிதான்!சோழியை தானமாக பெறுபவரும் அதிர்ஷ்டசாலிதான்!வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்த தினதில் தானமாக கொடுக்க வேண்டாம்.மறுநாள் சனிக்கிழமை இந்த தானத்தை செய்வது சிறப்பு.அதாவது உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சோழிகள் அப்படியேதான் இருக்க வேண்டும்.உங்கள் வீட்டில் பூஜை அறையில் இல்லாமல் வேறு இடத்தில் வைத்திருக்கும் சோழியை,தானத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களது வீட்டில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்க இந்த சோழியை வைத்து ஒரு வழிபாட்டை செய்யலாம்.இப்படி செய்யும்பட்சத்தில் மகாலட்சுமி மனநிறைவோடு வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.அது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.ஒரு கண்ணாடி அல்லது பீங்கானால் செய்யப்பட்ட பவுல் வாங்கிக்கொள்ள வேண்டும்.சிறிய அளவில் இருந்தாலும் போதும்.அதில் பாதி அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளவும். 5சாதாரணமான வெள்ளை சோழிகள், 1கருப்பு சோழி இவைகளை எடுத்துக் கொண்டு, 3வெள்ளை சோழிகளை நிமிர்த்தியவாறு தண்ணீருக்குள் போட வேண்டும்.மீதமுள்ள1கறுப்பு சோழி, 2வெள்ளை சோழிகளை கவிழ்த்து தண்ணீருக்குள் போட்டு விட வேண்டும்.அதாவது3சோழிகள் கவிழ்ந்து இருக்கவேண்டும். 3சோழிகள் நிமிர்ந்து இருக்க வேண்டும்.இது ஒரு வாஸ்து குறிப்பு!இப்படி செய்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும்,அமைதியும்,அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும் என்பது உறுதி.நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.இதற்காக பயன்படுத்தப்படும் பவுல் கண்டிப்பாக எவர்சில்வரிலோ அல்லது இரும்பிலோ இருக்கக் கூடாது.

இவ்வாறு சங்குமாலை,சங்குப்பாசி,ஐம்படைத்தாலி,சங்கு தாயத்து,மோதிரங்கள் அணிவிப்பது தீய சக்திகளிடம் இருந்து தங்கள் பிள்ளைகளை,கால்நடைகளைக் காப்பாற்றும் என்பதும் தமிழக மக்களிடம் வழக்கத்தில் இருந்துள்ளது.இதனால் நல்ல பயன்கள்தானே ஏற்படுகிறது,எந்தவிதத்திலும் யாருக்கும் தீங்கு செய்யவில்லை.அதனால் தான் அதிர்ஷ்டம்,மங்களம்,பாதுகாப்பு,தர்ம பாக்யம்,புண்ணிய பலன்,அழகு,ஆற்றல் போன்றவற்றை ஒருசேர வழங்குகிறது.தற்காலத்தில் ஏற்று செயல்பட நல்ல பக்குவமான மனநிலை மட்டுமே நமக்கு வேண்டும்.இயற்கை இன்பம் மட்டுமே தரும் அதுதான் அதன் இயல்பு!!!