INTERESTING FACTS ABOUT HUMAN Psychology
சுவாரஸ்யமான உளவியல் உண்மைகள்
- சிங்கிளாக இருக்கும் போது தம்பதிகள் சந்தோஷமாக தெரிவர். தம்பதிகளான பின்னர், சிங்கிளாக இருப்பவர்கள் சந்தோஷமாக தெரிவர்.
- இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
- தன் கருத்துகளை சரியென்று வாதாடும் ஒரு வக்கீலாகவும் அடுத்தவர் கருத்துகளை தவறென்று தீர்மானிக்கும் ஒரு நீதிபதியாகவும் இருப்பது மனித உளவியல்.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேசும் விதம் குழந்தையின் குரலாக மாறும்.
- அடுத்தவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை விட அந்தப் பிரச்சனைகளை ஆழமாக தெரிந்து கொள்ள விரும்புவது மனித உளவியல்.
- உடலில் ஏதேனும் காயம் உண்டாகும் போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே, ஒருவர் நம்மை புறக்கணிக்கும் போதும் மூளையில் ஏற்படுகிறது.
- மனிதர்கள் தன்னுடன் பிறந்தவர்களுக்கு ஒரு நியாயமும் தன் மனைவி/கணவன் உடன் பிறந்தவர்களுக்கு ஒரு நியாயமும் வைத்துக் கொள்வர்.
- தான் வாழ்வில் எடுக்கும் முடிவுகளை சில சந்தர்ப்பங்களில் தனக்காக மாற்றிக் கொண்டு அதை தானே மீறிச் செல்வதும் மனித உளவியலே.
- சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றித் தான் பெருமையாக செய்தி வெளியிடும்போது கிடைக்கும் சந்தோஷம், போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் மயக்கத்துக்கு இணையானது.
- சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.
- ஒருவர் பேசும் போது அவர்களின் கைகளை பிறர் பார்க்கும் படி வைத்திருந்தால் அவரின் பேச்சு நம்பகத்தன்மை கொண்டது.
- பொதுவாக பெண்களே ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள். பிறர் சொல்வதைப் பொய் என்று அறிந்து கொள்பவர்களும் பெண்களே.
- சிறிய கையெழுத்து உடையவர் அதிகமாகப் பேச மாட்டார்.
- சுயமதிப்பீடு குறைவாக உள்ளவர் எளிதில் அடுத்தவரை அவமானப்படுத்திவிடுவார்.
- தூங்கும் பொழுது தான் மூளை அதிக வேலை செய்யும். கனவுகள் என்பது உங்களுக்கும் உங்கள் ஆழ் மனதிற்கும் இடையிலான உரையாடல்கள்.
- கோபமாகவோ அல்லது அமைதி இல்லாத நிலையிலோ இருக்கும் பொழுது நீல நிறத்தை பார்த்தால் மனம் அமைதியடையும்.
- எதிர் பாலினத்துடன் பேசும் பொழுது மனபலம் அதிகரிக்கும்.
- சாக்லேட், ஆரஞ்சு போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும்.
- முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.
- 7 நேர்மறையான கருத்துகள் 1 எதிர்மறையான கருத்தின் விளைவை நடுநிலையாக்குகின்றன.
- உங்களைச் சுற்றி மரங்கள் அல்லது தாவரங்கள் இருக்கும்போது உங்கள் மூளை சில ரசாயனங்களை சுரக்கிறது, இது மூளையின் சிந்தனையைத் தூண்டுகிறது. உளவியல் சிகிச்சையில் தோட்டத்தில் நடைபயிற்சி செய்வதும் அடங்கும்.
உளவியல் உண்மை:
உளவியல் உண்மைன்னு சொல்றதெல்லாம் 100% உண்மையேயில்லைங்க!
ஒரு மாற்றுக் குறைவுதான்!
அதெல்லாமே உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று சொல்வதுதான் சரியான உண்மை.
உள்ளத்தை முழுதாய்ப் புரிந்தவர் யாருமில்லை, எனவே அந்த உளவியலை மீறி அதற்க்கு மாறாக நடக்கவும் வாய்ப்புண்டு என்பதும் உண்மை.
ஏனெனில் சிந்தனை செயல்முறை என்பது கால சூழ்நிலை, சஞ்சலம், சபலம் போன்ற சில எதிர்மறையான சந்தர்ப்பங்களில் மன உறுதியை கேள்விக்குறியாக்கும்?!
அப்போது உங்களின் வாழ்வில் உளவியல் மதிப்பு உங்களுக்கே மதிப்பெண் அளிக்கும்!