யார் சிறந்த மனிதர்?சிறந்த மனிதப் பண்பை யாரிடம் கற்றுக்கொள்வது?
யார் சிறந்த மனிதர்?என்ற கேள்விக்கு ஒரே பதில் இல்லை.ஒவ்வொருவரின் பார்வையும்,வாழ்க்கைப் பாதையும் வேறுபடும் என்பதால்,ஒருவரை ஒருவர் சிறந்தவர் என்று சொல்வது கடினம்.இருப்பினும்,ஒருவரை சிறந்த மனிதர் என்று நாம் கருதுவதற்கு சில பொதுவான பண்புகளைக் குறிப்பிடலாம்.
7சிறந்த மனித பண்புகள்:
- நேர்மை ஒரு சிறந்த மனிதர் எப்போதும் நேர்மையானவராகவும்,உண்மையைப் பேசுபவராகவும் இருப்பார்.
- இரக்கம் அவர் மற்றவர்களிடம் இரக்கமுள்ளவராகவும்,கருணையுள்ளவராகவும் இருப்பார்.
- தைரியம் அவர் பயமின்றி தனது கருத்துக்களை வெளிப்படுத்துபவராகவும்,கடினமான சூழ்நிலைகளில் தைரியமாக செயல்படுபவராகவும் இருப்பார்.
- பொறுப்பு அவர் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்பவராகவும்,மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுபவராகவும் இருப்பார்.
- அறிவு அவர் எப்போதும் கற்றுக்கொள்ளவும்,தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் ஆர்வமுள்ளவராகவும் இருப்பார்.
- நம்பகத்தன்மை அவர் நம்பகமானவராகவும்,வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராகவும் இருப்பார்.
- மரியாதை அவர் மற்றவர்களை மதிக்கக்கூடியவராகவும்,அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் இருப்பார்.
சிறந்த மனிதராகக் கருதப்படுபவர்கள்:
- சமுதாயத்திற்காகப் பாடுபடுபவர்கள்: அவர்களின் செயல்களால் சமுதாயத்தில் முன்னேற்றம் கொண்டு வருபவர்கள் சிறந்த மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்.
- பிறரை ஊக்குவிப்பவர்கள்: மற்றவர்களை ஊக்குவித்து,அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உதவுபவர்களும் சிறந்த மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்.
- அநீதிகளை எதிர்ப்பவர்கள்: அநீதிகளைக் கண்டு அமைதியாக இருக்காமல்,அதை எதிர்த்துப் போராடுபவர்களும் சிறந்த மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
- நலத்திட்டங்களைச் செய்பவர்கள்: ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுபவர்கள்,அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பாடுபடுபவர்கள் சிறந்த மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
எனவே,சிறந்த மனிதர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.அவரவர் பார்வையில்,அவரவர் செய்யும் செயல்களால் சிறந்த மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்,பின்பற்றுபவர்கள் சிறந்த மனிதர்களாக மதிக்கப்படுவார்கள்.இதோடு முடிந்ததா என்றால்?அதெப்படி சித்தப்பு!
மேலே குறிப்பிட்டுள்ள ஏழு பண்புகளைக் கடைபிடித்து வந்தால் இங்கே உலகம் உங்களுக்கு இரண்டு பெயர் கொடுக்கும்!ஒன்று நல்ல மனிதர்/சிறந்த மனிதர்,இரண்டாவது ஏமாளி/அப்புராணி/விவரம்.விஷயம் தெரியாதவன்!ஆகவே நீங்க முடிவு பண்ணினாலும் கருதுவது என்னவோ மக்கள்தான்.கண்டிப்பாக சுய விளம்பரத்திற்கு நீங்கள் நடிக்காமல் வாழ்ந்தால் அதுவே உங்களை சிறந்த மனிதராக மாற்றும்.
சிறந்த மனிதப் பண்பை யாரிடம் கற்றுக்கொள்வது? என்று நீங்கள் முயன்றால் உங்களுக்கான விளக்கம் பின்வரும் குறிப்புகளில் உண்டு.வாழ்க்கையில் நாம் சந்தித்தவர்களில் இருந்தும் சிறந்த பண்பு உங்களுக்கு வரும்,என்ன?ஏற்று கொள்ளும் பக்குவம் எப்போது வருமோ!அப்போது விளங்கும்.
1.சிலர் நம்மை ஏமாற்றி இருப்பார்கள்
2.சிலர் நம்மை அவர் தேவைக்கு பயன்படுத்தி இருப்பார்கள்
3.சிலர் நம்மை அவமானப் படுத்தி இருப்பார்கள்
4.சிலர் நம்மை அடித்து அவர் வலிமையை காட்டி இருப்பார்கள்
இவ்வாறு சிலர் நம்மை,சிலர் நம்மை,சிலர் நம்மை...என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால் அவர்கள் தான் இந்த மாதிரி இருக்க கூடாது என்று உங்களுக்கு கற்று கொடுத்து சிறந்த மனிதராக சிந்திக்க,செயல்பட உதவி செய்தவர்கள்.ச்சை இவனுகள மாதிரி நம்ம இருக்க,பிழைக்க கூடாதுடா!என்று உங்களை சிறந்த முடிவெடுக்க தூண்டியவர்கள்.இது ஒரு வகையில் உங்களை சிறந்த மனிதராக மாற்ற/மாற உங்கள் வாழ்க்கை உங்களுக்கு கற்று கொடுத்த பாடம்.
இன்னும் சற்று மேம்பட்ட தேடலில் நீங்கள் இருந்தால்,உங்களுக்கான பதில் பின்வரும் விளக்கத்தில் இருக்கலாம்!படித்து பிடித்து இருந்தால் முயற்சித்து பாருங்கள் உபதேசங்கள் கேட்பதும் ஒரு நல்ல பண்பே!
திருநாவுக்கரசர் தேவாரம்:
தலம்:திருப்பூவனூர்
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அனுசயப்பட்டு அது இது என்னாதே
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கிப்
புனிதனைப் பூவனூரனைப் போற்றுவார்
மனிதரில் தலையான மனிதரே. 5.65.6
திருச்சிற்றம்பலம்
பொருளுரை:
ஒவ்வாமை கொண்டு"அது" "இது"என்று கூறிக்கழியாது,
கனிந்த மனத்தோடு,கண்கள் நீர் மல்கப்
புனிதனான திருப்பூவனூர் இறைவனைப் போற்றுவார்கள்
மனிதர்களிலெல்லாம் சிறந்த மனிதர்கள்.
Notes:
1.பெரும்பான்மை நேரத்தையும் குற்றம் காண்பதிலும்,வெற்றாராய்ச்சிகளிலும் வீண் செய்யாது,
சிவபெருமானின் திருவடிகளுக்கு அன்பு செலுத்தி உய்பவர்களே மனிதப் பிறவியின் பயன்கொண்டு உயர்ந்தோர்.
2.லோகத டொங்கவ நீவேகே தித்துவிரி நிம்ம நிம்ம தனுவ சந்தைசிகொள்ளி-பசவண்ணர்.
(உலகத்தார் குற்றங்களை நீங்கள் ஏன் திருத்துகிறீர்.உங்கள் செய்லைச் சரிசெய்துகொள்ளுங்கள்.)
3.அனுசயம்-பச்சாத்தாபம்/இழிவு நோக்கம்.
SWAMI VIVEKANANDAR:-
The ideal man is he who, in the midst of the greatest silence and solitude, finds the intensest activity, and in the midst of the intensest activity finds the silence and solitude of the desert. He has learnt the secret of restraint, he has controlled himself. He goes through the streets of a big city with all its traffic, and his mind is as calm as if he were in a cave, where not a sound could reach him; and he is intensely working all the time. That is the ideal of Karma-Yoga, and if you have attained to that, you have really learnt the secret of work.
சுவாமி விவேகானந்தர்:-
மிகப்பெரிய அமைதி மற்றும் தனிமையின் மத்தியில்,தீவிரமான செயல்பாட்டைக் கண்டறிபவனே சிறந்த மனிதன்,மேலும் தீவிரமான செயல்பாட்டின் மத்தியில் பாலைவனத்தின் அமைதி மற்றும் தனிமையைக் கண்டறிபவன்.அவன் கட்டுப்பாட்டின் ரகசியத்தைக் கற்றுக்கொண்டான்,தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.அவன் ஒரு பெரிய நகரத்தின் தெருக்களில் அதன் அனைத்து போக்குவரத்தும் வழியாகச் செல்கிறான்,அவன் மனம் ஒரு குகையில் இருப்பது போல் அமைதியாக இருக்கிறது,அங்கு எந்த சத்தமும் அவனை அடைய முடியாது;அவன் எப்போதும் தீவிரமாக வேலை செய்கிறான்.அதுதான் கர்ம-யோகத்தின் இலட்சியம்,நீங்கள் அதை அடைந்திருந்தால்,நீங்கள் உண்மையில் வேலையின் ரகசியத்தைக் கற்றுக்கொண்டீர்கள்.
பொதுவான கருத்து என்னவெனில் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களிடமும் அல்லது உயிரினங்களிடமும் ஒரு குறிப்பிட்ட அளவு இடைவெளியை விட்டு உண்மையாக வாழ்ந்து பழகுங்கள்.கடமைகளை தவறாது செய்து முடியுங்கள்,மற்றவற்றை காலம் சொல்லும்!இவர் போல யாரென்று..!
நிலத்தைப் போலவே பிழைகளே பண்படுத்தும்,சீர்படுத்தும்,உரமாக்கும் நமது மனதையும்.இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில்,சுற்றி இருப்பவர்களே புண்படுத்துவார்கள் அவர்களே பண்படுத்துவார்கள்.