தானம், தருமம், அறம், வள்ளல் மற்றும் ஈகை பற்றிய விரிவான விளக்கம்

by Vijay Mayilsamy

Video Thumbnail

தானம் என்றால் என்ன?தருமம் என்றால் என்ன?அறம் என்றால் என்ன?வள்ளல் என்றால் என்ன?ஈகை என்றால் என்ன?

ஒரு பொது புழக்கத்தில்,ஆங்கில வார்த்தையான"மதம்"என்பது லத்தின் அர்த்தமான"ஒன்றுபடுதல்"என்பதில் இருந்து வந்ததைப் போன்று தர்மம் என்ற வார்த்தையானது சமஸ்கிருதமான"தர்"இல் இருந்து பெறப்பட்டது,இதன் பொருள் இருக்கமாக பிடித்தல் அல்லது ஆதரித்தல் என்பதாகும்.முக்கியமாக,நீண்ட காலமாக நாம் கட்டுப்படுத்த முடியாத துன்பங்களுக்கு ஆளாக வேண்டிய கீழ்நிலை,துரதிர்ஷ்டவசமான நிலைகளுக்கு நாம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதன் மூலம் தர்மம் நம்மை உறுதியாக ஆதரிக்கிறது.

தானம் என்றால் என்ன?

தானம் என்பது தமிழ் மொழியில் ஒருவருக்காக,குறிப்பாக தேவைப்படும் நேரத்தில் அல்லது பிறரின் நலனுக்காக,பொருள்கள்,பணம் அல்லது மற்ற சலுகைகளை தாராளமாக கொடுக்கும் செயல் ஆகும்.தானம் செய்யும் போது அதற்கான நோக்கம்,கொஞ்சம் நிதான புத்தியுடன் செய்ய வேண்டியது மிக அவசியம்!

தானத்தின் பொருளடக்கம்:

  1. பிறருக்காக தியாகம்:தானம் என்பது சுயநலமற்ற பரிசாகும்,அதில் கொடுப்பவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.
  2. தெய்வீகமான செயல்:பல மதங்களில்,தானம் ஒரு புனித செயல் அல்லது கட்டளையாகக் கருதப்படுகிறது.
  3. அன்பும் கருணையும்:தானம் பிறருக்கு உதவிடும் ஒரு வகையான அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாகும்.

5வகைத் தானங்கள்:

  1. அன்னதானம்:உணவை பகிர்ந்து கொடுப்பது.
  2. வித்யாதானம்:கல்வி அல்லது அறிவை பிறருடன் பகிர்ந்து கொடுப்பது.
  3. தனதானம்:பொருளாதார உதவி செய்வது.
  4. ரத்ததானம்:ரத்தத்தை தாராளமாக கொடுப்பது.
  5. ஆவியதானம்:ஆன்மிகம் அல்லது சிந்தனைகளை பகிர்ந்து உதவுவது.

தானம் செய்வதில் முக்கிய நெறிமுறைகள்:

  • சுயநலமற்ற செயல்:தானத்தை எவ்வித பாராட்டும் எதிர்பாராமல் செய்ய வேண்டும்.
  • உரிய நேரம் மற்றும் இடம்:தானம் செய்யும் போது அதை தேவையானவருக்கு சரியான சூழ்நிலையில் செய்ய வேண்டும்.
  • கொடுத்தவுடன் மறந்துவிடுதல்:தானம் செய்ததை ஒரு பெருமையாக எண்ணாமல்,மனதிற்குள் எதையும் வைத்துக்கொள்ளாமல் செய்ய வேண்டும்.

தானம் செய்யும் பொருட்டு,ஒருவரின் மனம் உயர்வடையும்,மேலும் அது சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் மற்றும் பரிமாற்றத்தையும் ஏற்படுத்தும்.

தருமம் என்றால் என்ன?

தருமம் என்பது நியாயம்,நீதிமான வாழ்க்கை,ஒழுக்கம் மற்றும் பிறருக்கு நன்மை செய்யும் உயரிய வாழ்க்கைமுறையை குறிக்கும் தமிழ் சொல்.இது ஒழுங்கான செயல் முறையையும்,உண்மையைப் பேணுவதையும்,சமுதாய நலனுக்காக செயல்படுவதையும் அடிப்படையாகக் கொண்டது.

தருமத்தின் பொருள்:

  1. சமதர்மம்:எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்ளும் உயரிய வாழ்க்கை நெறி.
  2. நீதிநிலை:தன் செயல்களில் எப்போதும் நீதியைப் பின்பற்றல்.
  3. அறநெறி:வாழ்க்கையின் ஒழுக்கநெறிகளையும்,நன்னடத்தையையும் அனுசரித்தல்.
  4. தெய்வீகக் கடமைகள்:புனித முறையில் கடமைகளைச் செயல்படுத்துதல்.

தருமத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. உறுதியான ஒழுக்கம்:தவறான செயல் செய்யாமல்,நேர்மையாக வாழ்தல்.
  2. தயவும் கருணையும்:பிறரின் நலனுக்காக செயல் புரிவது.
  3. அறம்:தருமம் செய்யும் செயல்கள்,அறமாகவும்,பிறர் நலனுக்கானதாகவும் இருக்க வேண்டும்.

தருமத்தின் வகைகள்:

  1. வீட்டார தருமம்:குடும்பத்துக்காக செய்யும் கடமைகள்.
  2. சமுதாய தருமம்:சமுதாய நலனுக்காக செய்யும் வேலைகள்.
  3. மெய்தருமம்:ஆன்மீக வளர்ச்சிக்காக கடைப்பிடிக்க வேண்டிய தருமம்.

தருமத்தின் முக்கியத்துவம்:

  • தருமம் இல்லாத வாழ்க்கை குழப்பத்தையும் அறம் இழப்பையும் உண்டாக்கும்.
  • ஒரு மனிதனின் உயர்வு மற்றும் சமுதாயத்தின் நலன் தருமத்தின் அடிப்படையில் இருக்கும்.
  • தருமம் மனிதனை எப்போதும் நேர்மையான பாதையில் நடத்துகிறது.

**"தருமம் செய்தவனுக்கு எப்போதும் நலனே வந்து சேரும்"**என்பது வாழ்க்கையின் மெய்பொருள் என்று சொல்லப்படுகிறது.

அறம் என்றால் என்ன?

தானத்தின் பெருமையும்,தர்மத்தின் சிறப்பும் அறத்துக்குள் சங்கமம் ஆகின்றன.தானமும்,தர்மமும் இமியளவேனும் சுயநலம் கருதாது செய்யப்படும்போது அவையே அறமாகின்றன.விழலுக்கு இறைக்காமல்,வீணரிடம் போகாமல் எங்கே போகவேண்டுமோ அங்கேயே போய்ச் சேரும் அறம்.அதனால்தான் பலன் கருதாமல் செய்கின்ற கடமைகளையெல்லாம் “அறம்” என்னும் பெட்டகத்துக்குள் அடக்கினர் ஆன்றோர்.

அறம் என்பது மனிதர்கள் செம்மையுறவும் இன்புற்று வாழவும் அவர்களின் செயல்களில் தேவையானவற்றை தவிர மற்றவற்றை நீக்குவது.எனவே தனது செயல்களில் அதை கடைபிடிப்பது அவனுக்கு மட்டுமன்றி இந்த உலகம் நிலைப்பதற்கும் அவசியம்,

  1. நமது உடலுக்கும்,மனதிற்கும் தீங்கு ஏற்படுத்தாமல் வாழ்தல் அறம்.
  2. பிறர் உடலுக்கும்,மனதிற்கும் தீங்கு இழைக்காமல் வாழ்தல் அறம்.
  3. சமூகத்தில் உள்ள அறம் சார்ந்த கட்டுப்பாடுகள்,சட்டம் விதிகளின் படி நடப்பது அறம்(ஊருடன் ஒத்து வாழ்தல்).
  4. யாருக்கும் தொந்தரவு தராமல் வாழ்தல் அறம்.
  5. பொது நலத்துடன் சேர்த்து சுயமதிப்பு,சுயவிழிப்புணர்வு,சுய அக்கறை கொண்டிருத்தல் அறம்.
  6. மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்தும் காரணிகளை செய்யாமல்,பேசாமல் இருத்தல் அறம்.

வள்ளல் என்றால் என்ன?

வள்ளல் என்ற சொல்,தமிழில்"கொடை வழங்குபவர்"அல்லது"உதவி செய்பவர்"என்ற பொருளைக் குறிக்கிறது.ஒரு வள்ளல்,பிறரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றை மனம் திறந்து வழங்குவான்.மேலும் அவன் கொடுக்கும் பொருள்,பெறுபவரின் வாழ்நாள் முழுவதற்கும் போதுமானதாக இருக்கும் படி கொடுப்பான்.

சங்க காலத்தில்,வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாக ஏழு வள்ளல்கள் திகழ்ந்தனர் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.பாரி,பேகன்,அதிகன்,காரி,ஓரி,ஆய்,மற்றும் நள்ளி.இவர்கள்,தன்னிடம் வரும் இரவலர்களுக்கு,எவ்வித தயக்கமும் இன்றி,மனம் திறந்து பொருள் கொடுத்து உதவுவதில் சிறந்தவர்களாக விளங்கினார்கள்.

முதல் ஏழு வள்ளல்கள்:சகரன்,காரி,நளன்,துந்துமாரி,நிருதி,செம்பியன்,விராடன்

**இடையேழு வள்ளல்கள்:**அக்குரன்,அந்திமான்,கர்னன்,சந்தன்,சந்திமான்,சிசுபாலன்,வக்கிரன்

ஆனால் பொதுவாக என்ன வியப்பான கொடைகளுக்காக இவர்கள் வள்ளல்கள் என அறியப்படுகிறார்கள்?

  • பாரி-முல்லைக்குத் தேர் தந்த வள்ளல்.
  • பேகன்-மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல்.
  • காரி-பொதுவாக வாரி வழங்கிய வள்ளல்.
  • ஆய்-நாகம் அளித்த நீல மணியினை குற்றால நாதருக்கு வழங்கிய வள்ளல்.
  • அதிகன்-அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்த வள்ளல்.
  • நள்ளி-பொதுவாக வாரி வழங்கிய வள்ளல்.
  • ஓரி-தனது நாட்டை பாணற்கு வழங்கிய வள்ளல்.

மேற்கூறிய விவரங்களைப் படித்தபின் இனி இத்தகைய வள்ளல்கள் தோன்றுவது கடினம் என்பதற்காகவே, 'கடையெழு வள்ளல்கள்'என இவர்கள் சிறப்பிக்கபட்டார்களோ என்னும் ஐயம் எழுவது இயல்புதானே?

ஈகை என்றால் என்ன?

ஈகை ஒருவனுக்கு உண்மையான இன்பத்தை கொடுக்கும்.கை பெற்றதன் பயன் ஈகை செய்வதே!மிகவும் வறுமை நிலையில் இருந்து உதவி என்று கேட்பவர்க்கு இல்லை என்று கூறாமல் நம்மால் இயன்ற உதவியை செய்தல்,பசியால் வாடுபவர்களுக்கு பசி தீர்க்கும் உணவைக் கொடுப்பது ஈகை எனப்படும்.

ஒரு பொருளும் இல்லாத ஏழை எளியவர்களுக்கு தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து உதவி செய்வதும் ஈகை பண்பாகும்.நம்மிடம் வரும் ஏழை,எளியோருக்கு இல்லை எனக் கூறாது கொடுக்க வேண்டும்.கொடுப்பவருக்கும் இன்பம்,பெறுபவருக்கும் இன்பம்.இதனை ஈத்துவக்கும் இன்பம் எனப் பேசுவார் நக்கீரர்.

ஈகை என்றும்,தானம் என்றும்,கொடை என்றும் பல சொற்களால் கூறப்படும் செயல்,உண்மையில் இன்பம் தரும் செயலாகும்.பொருளை கொடுப்பது மட்டும் தான் தானமா?துன்பத்தில் சோர்ந்த ஒருவனிடம் ஆறுதல் வார்த்தை பேசுவதும் தானமே!பிறருக்காக உழைப்பதும் தானமே!இருக்கும் போது ரத்த தானம்,இறந்த பின் கண்தானம் என்பது இன்றைய உலகில் தாரக மந்திரம்.

'வந்தால் வியாபார கணக்குல சேரும்,வராவிட்டால் பசி தீர்த்த புண்ணிய கணக்கில் சேரும்'

மேலே உள்ள இந்த வாக்கியம் ஒருவரின் வாழ்க்கை பாதையை மாற்றி பலருக்கும் அளவின்றி கொடுத்த கரங்களை உண்டாக்கிய வார்த்தை!வார்த்தை வெளிப்பட்டது ஒரு சாதாரண ஏழை மூதாட்டியிடம் இருந்து..!வார்த்தையை உள்வாங்கி பின்பற்றியது எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள்..!

ஆகவே வெற்று விளம்பர நோக்கில் செய்யாமல் தான தர்மங்களை அனைத்து உயிர்களுக்கும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யுங்கள்.இயலாத உயிர்க்கு இயன்றவரை பசிதீர்க்க முடிந்ததை செய்யுங்கள்,தக்க சமயத்தில் உங்களுக்கும் தர்மம் உயிர்காக்கும்!!!