ஏன் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க முடியாது?

by Vijay Mayilsamy

Video Thumbnail

ஏன் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க முடியாது?

  • இயற்கையான மனித உணர்வுகள் அனைவருக்கும் சந்தேகம்,பயம்,தயக்கம் போன்ற உணர்வுகள் இயல்பாகவே இருக்கும்.

  • புதிய சூழ்நிலைகள் அறியாத,அனுபவிக்காத விஷயங்களில் தன்னம்பிக்கை குறைவாக இருக்கலாம்.

  • தோல்விகள் மற்றும் நெகிழ்ச்சிகள் சில தவறுகள்,தோல்விகள் தற்காலிகமாக நம்பிக்கையை குறைக்கலாம்.

  • நம்பிக்கை?தன்னம்பிக்கை?அதீத நம்பிக்கை?அவநம்பிக்கை? உங்களால் உங்களுக்குள் மாற்ற முடிவதை மாற்ற முயலுங்கள்;மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.ஒருவரின் உயரம்,தோலின் நிறம்,தலை முடியின் அளவு, போன்றவற்றை மாற்ற முடியாது;அவை குறித்து தாழ்வு மனப்பான்மையைச் சுமந்துகொண்டே இருப்பது வீண். ஆனால், உடல் தூய்மை, சுகாதாரம், முகத்தில் புன்னகை, ஆரோக்கியம், தக்க ஆடைகளை அணிந்து தோற்றத்தில் ஒரு பொலிவை உண்டாக்கிக் கொள்வது இவை நமக்கு சாத்தியம். கடவுள் எல்லாருக்கும் எல்லாத் திறமையையும் கொடுத்துவிடுவதில்லை; அதே சமயம் ஒரு திறனும் இல்லாதவராகவும் யாரையும் படைப்பதில்லை.எத்தனை கற்றும், முயன்றும் உங்களுக்கு வராத திறன்கள் உண்டு என்றால் அவற்றைப் பெற உங்கள் சக்தியை விரயமாக்காதீர்கள். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை, பணி, வருமானம் இவற்றில் முன்னேற்றம் காண அத்தியாவசியமான திறன்கள் எவை எவை,அவற்றுள் உங்களால் முயன்று மேலும் திறனையும்,அறிவையும் தனித்தன்மையையும் வளர்த்துக்கொள்ள சாத்தியமாய் உள்ளவை எவை எவை என்று அலசுங்கள். அந்தத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி, நேரம், பொருள் செலவழித்து, படித்தும், கற்றும், அறிந்தும் ஒரு BUSINESS PERSON ஆக எல்லா முயற்சியையும் எடுங்கள். 'முடியும் என்பதை முடியும்' என்றும் உங்களால் கண்டிப்பாக 'முடியாததை முடியாது' என்று சொல்லும் துணிவு உங்களுக்கு வேண்டும்.முடியாததைத் தலை மேல் போட்டுக்கொண்டு திண்டாடினால் அது தன்னம்பிக்கையைக் குலைக்கும். எதிர்க் கருத்துகளைச் சொல்பவர்கள் எதிரிகள் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம்.விமர்சனங்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. விமர்சனங்களை ஏற்று அவற்றின் மூலம் பலன் பெற முடியும் என நம்புங்கள். தொட்டால் சிணுங்கியாக இருந்தால் அதுவும் தன்னம்பிக்கையின் எதிரி. பொறாமை, முன்னேறியவர்களைக் கண்டு எரிச்சல், திறமை அதிகம் உள்ளவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து மனக் குமைச்சல் இவை தன்னம்பிக்கையின் எதிரிகள். தகுதிக்கு மீறிய ஆசை, திறமைக்கு மீறிய எதிர்பார்ப்பு, விரலுக்குத் தகாத வீக்கம் இவை FREQUENTஆக உங்கள் தோல்விகளை/வெற்றி இன்மைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி உங்கள் தன்னம்பிக்கையைக் கெடுக்கும். உங்களுக்கு மேலான ஒரு சக்தி(இறைவன்) உங்களை வழி நடத்திச் செல்கிறது என்பதை நம்புங்கள்.அந்த சக்தியிடம் பணிந்து உங்கள் நியாயமான முயற்சிகளுக்கு உதவ வேண்டுங்கள். நம்மை விடவும் முயற்சியிலும் பயிற்சியிலும் சிறந்த அறிவாளிகளும் திறமையானவர்களும் உண்டு என்று ஏற்றுக்கொண்டு ஆரோக்கியமான கள போட்டிக்கு மனதையும் உடலையும் பழக்குங்கள். அதை விடுத்தது நமக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற தற்குறி மனநிலையில் இருந்தால் நீங்கள் இன்னும் கத்துக்குட்டியே அன்றி சாதனை வரிசையில் நிற்க காலம் கடத்துகிறீர்கள்!!!

தைரியம் என்பது என்ன?

சரியான நேரத்தில் சரியான முடிவுகளும்,மிகச் சரியான செயல்களும் கையாள தெரிந்திருக்க வேண்டும்!!இதற்கு தேவை என்ன? கொஞ்சம் பொது அறிவு! கொஞ்சம் பக்குவம்! கொஞ்சம் நிதானம்!!

ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு நபர் தனது அறிவில் சேகரித்து வைத்திருக்க கூடிய தகவல்கள்10என்றால் நம்மிடம்20இருந்தாக வேண்டும்!ஒரு விஷயத்தை ஒருவர் எடுக்கக்கூடிய முடிவுகளுக்குசிந்திக்கிற மணித்துளிகள் ஆறு நிமிடங்கள் என்றால்நமக்கு இரண்டு நிமிடங்கள் போதும்!!ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும்,ஒவ்வொரு காரியங்களுக்கும்,அதை நடத்துகிற விதங்களுக்கும்formulaஎன்பது நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அதற்குத் தேவை எல்லாம் எப்போதும் நமக்குள் தகவல்கள் சேகரிக்கும் படித்தல் ஆர்வம் வளர்ந்து(வளர்த்து)கொண்டிருக்க வேண்டும்,தொடர்ந்து படியுங்கள்!நடைமுறை படுத்துங்கள்!!படித்து,படித்து,படிப்படியாய்,பிடித்துஉங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்!!

தன்னம்பிக்கையை எப்போதும் அதிகரிக்க என்ன செய்யலாம்?

  • அனுபவம் பெறுதல் அதிகம் முயற்சி செய்தால் தன்னம்பிக்கை இயல்பாக வளரும்.
  • தவறுகளை கற்றுக்கொள்ளுதல் தோல்விகளை பயமில்லாமல் ஒரு பாடமாக பார்க்க வேண்டும்.
  • தன்னம்பிக்கை கொடுக்கும் சூழ்நிலை உருவாக்குதல் ஆதரவு தரும் நபர்களுடன் இருப்பது உதவியாக இருக்கும்.

உயர்வான எண்ணங்கள் பயிற்சி செய்யுதல்

"நான் முயற்சி செய்யலாம்,நான் வளரலாம்"என்ற மனப்போக்குடன் செயல்படுதல்.

பிறகென்ன நீங்களும் ஒரு சாதனை மனிதராக சமூகத்தில் வலம் வரலாம், உங்களைப் பின்பற்றி அடுத்த தலைமுறை'சாதனையாளர்கள் உருவாக ஒரு கருவியாக' நீங்களும், உங்கள் வாழ்க்கையும் இருக்கும்.