எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்
“எண்ணம் போல் வாழ்க்கை” என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள்.நீங்கள் எப்படி நினைக்கின்றீர்களோ,அது போல் தான் வாழ்க்கை.நல்லதை நினைக்கும் போது,நல்லது நடக்கும்.கெட்டதை நினைக்கும் போது,கெட்டது நடக்கும்.
உங்கள் எண்ணங்கள் உதயமாவது உங்கள் இதயத்தில்ORமனதில்.பின்பு மூளை அதனை செயல் படுத்த ஆரம்பிக்கிறது.ஆனால்,இதயம் சொல்கின்ற அனைத்தையும் மூளை செயல் படுத்துவது இல்லை.அதற்கு எது சரியென்று படுகிறதோ,அதை அது செய்யும்.
இப்படித்தான் எண்ணங்களின் சுழற்சி அலை இருக்கிறது.
இதயம் —→>>>மூளை>>>>>>உறுப்புகள்.
நாம்,பொதுவாக நினைக்கும் தவறான எண்ணங்கள்:
-
எனக்கு மட்டும் உடல்நிலை முடியவில்லையே!
-
எனக்கு ஏன் எல்லாமே கெட்டதாக நடக்கின்றன?
-
நான் என்ன பாவம் செய்தேன் ?
-
இப்படி எல்லாம் நடக்கின்றதே ?
-
ஒரு முன்னேற்றமும் அடைய முடிய வில்லையே?
-
வியாபாரம் நஷ்டத்தில் போகின்றதே ?
-
அவர்கள் நன்றாக இருக்கிறார்களே!
-
இவர்களைப்போல் நான் கெட்ட செயல் செய்யலையே!
-
இப்படி பல்வேறு பட்ட கெட்ட எண்ணங்கள் தான் மனிதனை அலைக்கழிக்கின்றன.
ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் பலவற்றை சிந்திக்கின்றான்.இதில்75%நீங்கள் சிந்திக்கும் ஒரே எண்ணம் மாறி மாறி வருகிறதா?அப்படி என்றால்,நீங்கள் எப்படிப்பட்ட எண்ணங்களை சிந்திக்கின்றீர்களோ...அதே எண்ணமே மனதையும் உடலையும் பிறரை பார்க்கும் போதும் சுற்றி சுற்றி வருகின்றது.இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும்.உங்கள் எண்ணத்தின் தாக்கம் எப்படி பட்டது என்று?ஆதலால்,நாம் நல்லவற்றை நினைக்கும் போது,நல்லது மட்டுமே நடக்கும்.அடுத்தவர்களை வெறுப்பதால்,அது நமக்கு தான் நோயை கொண்டு வருகின்றது.
இப்படிப் பட்ட கெட்ட எண்ணங்களை உங்களிடம் இருந்து தூர எறியுங்கள்.
மனதில் எண்ணங்கள் அலையாக ஓடிக் கொண்டே தான் இருக்கும்.அவை உங்களை வலுப்படுத்துகின்றனவா?அல்லது வலுவிழக்கச் செய்கின்றனவா?என்பதே கவனத்தில் கொள்ளப் பட வேண்டியது.
வீணான எண்ணங்களையும்,பயனற்ற எண்ணங்களையும் அகற்றுவதே,மன ஆரோக்கியத்திற்கு உகந்த வழி.
மனக் குதிரை ஓடும் திசையில் ஓடட்டும்.உங்களை விட்டு நீங்களே ஒதுங்கி நின்று,எண்ணங்களை கவனியுங்கள்.
வலுவான எண்ணங்கள்,நேர்மறையான சிந்தனைகள் வலுப்பெறட்டும்.
தேவையற்றவற்றை,உங்களால் நிறுத்த முடியாது.ஆனால்,அவற்றின் இடத்தில் தேவையான நேர்மறை சிந்தனைகளைக் கொண்டு வர முயலுங்கள்.
நன்மையை எண்ணும் மக்களுடன் தொடர்பில் இருங்கள்.அவர்கள் உங்களை ஊக்குவித்து,மனதில் நல்ல எண்ணங்களை வளர்க்க உதவுவர்.
நல்லதை மட்டும் நினைக்க மனதை(Train)பழக்கப் படுத்துங்கள்.அப்பொழுது பாருங்கள்,அந்த பாஷிடிவ் எனர்ஜி(Positive Energy)இன் தாக்கம் நடக்கும்.
நல்ல எண்ணங்களை வளர்க்க உதவும் சில முக்கியமான வழிகள்:
- பிடித்த பாடலை கேட்கலாம்.
- உடற்பயிற்சி செய்யலாம்.
- பிடித்த புத்தகங்கள் படிக்கலாம்.
- குழந்தைகளுடன் விளையாடலாம்.
- செல்ல பிராணிகளுடன் நேரம் செலவிடலாம்.
- முடியாத பட்சத்தில்,நல்ல்லாலாலா சாப்ட்டு தூங்கிடுங்க"யோசிக்காதீங்க”

